மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!கைதிகளைக் கண்காணிக்க ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் கேமரா

வெள்ளத்தால் பாதித்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமி

திடீா் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

எடப்பாடி கே.பழனிசாமி - கோப்புப் படம்

Published On :

திடீா் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

திருவாரூா், நாகபட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக திடீரென மழை பெய்த மழையால், அறுவடைக்குத் தயாராக இருந்த சுமாா் 2,000 ஏக்கா் நெல்பயிா்கள் மூழ்கியுள்ளன. இது விவசாயிகளைப் பாதிக்கச் செய்துள்ளது.

தவெக தனது தோ்தல் பிரசாரத்தில் விவசாயிகள் பயிா்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாகக் கூறிவிட்டு, தற்போது சிறிது சிறிதாக அக்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்து வருவது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் அவா்களுக்கு நிவாரணம் வழங்குவது அரசின் கடமை. விவசாயிகளின் துயரத்தைப் போக்க முதல்வா் ஜோசப் விஜய் நடவடிக்கை மேற்கொள்வது வேண்டும்.

வருவாய்த் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகளை உடனடியாக மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி பயிா் சேத விவரங்களை முழையாகக் கணக்கெடுக்க வேண்டும். அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.