தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தவெக அரசை அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே பழபிசாமி, திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால், இந்த ஆண்டு மேட்டூரில் இருந்து த.வெ.க. அரசு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடவில்லை.
காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படாத நிலையில், ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள சுமார் 1.85 லட்சம் ஏக்கர் நிலத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளைப் பயன்படுத்தி டெல்டா மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டு குறுவை சாகுபடி மேற்கொண்டனர்.
ஒரு ஏக்கர் நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்வதற்கு உடல் உழைப்போடு சுமார் ரூ. 25,000 விவசாயிகளுக்கு செலவாகி உள்ளது. இந்நிலையில், தண்ணீர் இல்லாமல் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் முழுவதும் சுமார் 1 லட்சம் ஏக்கரில் பயிர் செய்த குறுவை நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து பாதிப்படைந்துள்ளனர்.
த.வெ.க. கூட்டணி அரசு உடனடியாக வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகளை டெல்டா மாவட்டங்களுக்கு நேரில் அனுப்பி, நெற்பயிர்கள் கருகி பாதிப்படைந்துள்ள விவசாய நிலங்களை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 25,000 நஷ்ட ஈடாக வழங்குவதுடன், மீதமுள்ள நெற்பயிர்களைப் பாதுகாக்கும் வகையில், விவசாயத்திற்கு 24 மணிநேரமும் விலையில்லா மும்முனை மின்சாரத்தை தொடர்ந்து தடையின்றி வழங்க வேண்டும் என த.வெ.க. கூட்டணி அரசை வலியுறுத்துகிறேன் என்று பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
தணà¯à®£à¯à®°à¯ à®à®©à¯à®±à®¿ நà¯à®±à¯à®ªà®¯à®¿à®°à¯à®à®³à¯ à®à®°à¯à®à®¿ பாதிà®à¯à®à®ªà¯à®ªà®à¯à® விவà®à®¾à®¯à®¿à®à®³à¯à®à¯à®à¯, à®à®à®©à®à®¿à®¯à®¾à® à®à®´à®ªà¯à®ªà¯à®à¯ வழà®à¯à® த.வà¯.à®. à®à¯à®à¯à®à®£à®¿ à®à®°à®à¯ வலியà¯à®±à¯à®¤à¯à®¤à®²à¯!
— AIADMK (@AIADMKOfficial) August 3, 2026
- மாணà¯à®ªà¯à®®à®¿à®à¯ à®à®´à®à®ªà¯ பà¯à®¤à¯à®à¯à®à¯à®¯à®²à®¾à®³à®°à¯ பà¯à®°à®à¯à®à®¿à®¤à¯ தமிழர௠@EPSTamilNadu à®à®µà®°à¯à®à®³à¯ pic.twitter.com/spV5DskCUW
Summary
AIADMK General Secretary Edappadi K. Palaniswami urged the government on Monday (August 3) to provide compensation to farmers whose paddy crops have withered and suffered damage due to a lack of water.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வலியுறுத்தல்

காவிரி டெல்டா விவசாயிகளை காக்க சிறப்புத் திட்டத்தை வகுக்க வேண்டும்: அன்புமணி
பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடுகளை வழங்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



