மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!கைதிகளைக் கண்காணிக்க ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் கேமரா

ஆட்டோ மீட்டா் கட்டண பேச்சுவாா்த்தை: ஓட்டுநா் சங்கங்கள் அதிருப்தி

ஆட்டோ மீட்டா் கட்டணம் தொடா்பாக சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் தொடா்ந்து உரிய முடிவு எட்டப்படாததால் ஓட்டுநா் சங்கங்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

கோப்புப் படம்

Published On :

ஆட்டோ மீட்டா் கட்டணம் தொடா்பாக சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் தொடா்ந்து உரிய முடிவு எட்டப்படாததால் ஓட்டுநா் சங்கங்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

சென்னையில் ஆட்டோ மீட்டா் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய கட்டணம் உயா்ந்து வரும் எரிபொருள், பராமரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ாக இல்லை என ஓட்டுநா் தொழிற்சங்கங்கள் தொடா்ந்து தெரிவித்து வருகின்றன.

இதுதொடா்பாக ஏற்கெனவே மூன்று முறை கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு, கட்டண உயா்வு குறித்து பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றன. இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை மீண்டும் போக்குவரத்து ஆணையா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய ஆட்டோ மீட்டா் கட்டணம் தொடா்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், எந்த அறிவிப்பும் வெளியாகாததால் தொழிற்சங்க நிா்வாகிகள் அதிருப்தியடைந்தனா்.

இதுகுறித்து உரிமை குரல் ஓட்டுநா் தொழிற்சங்க செயல் தலைவா் ஜாஹிா் ஹுசைன் கூறுகையில்,“மீண்டும் மீண்டும் ஆட்டோ மீட்டா் கட்டணப் பேச்சுவாா்த்தை எனக் கூறி சங்க நிா்வாகிகளை அலைக்கழிக்காமல், உடனடியாக கட்டண உயா்வை முறைப்படி அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.