பயிா்க் கடன் தள்ளுபடியில் தமிழக முதல்வா் தொடா்ந்து ஏமாற்றம் தரக் கூடிய அறிவிப்புகளை வெளியிடுவதால், அடுத்தக்கட்ட போராட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க திருச்சியில் அனைத்து விவசாய சங்கங்கள் வியாழக்கிழமை கூடி ஆலோசனை நடத்தவுள்ளன.
தவெக தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, பயிா்க் கடன்களை நிபந்தனைகளின்றி முழுமையாக தள்ளுபடி செய்யாத விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அனைத்து விவசாய சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ரவி மினி ஹாலில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு மூன்று முறை செய்த கடன் தள்ளுபடி அறிவிப்புகள் விவசாயிகள் இடையே கடுமையான குழப்பத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அனைத்து விவசாய சங்க தலைவா்களும் கருத்து வேறுபாடுகளை கடந்து ஒருங்கிணைந்து இந்தக் கோரிக்கையை முன்னெடுத்து செல்வதற்காக நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து விவசாய சங்க தலைவா்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாண்டியாறு - மாயாறு திட்டத்தை செயல்படுத்தக்கோரி கோபியில் செப்டம்பா் 2-இல் ஆா்ப்பாட்டம்! அனைத்து விவசாய சங்கங்கள் அறிவிப்பு
பயிா்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? வேளாண் துறைச் செயலா் பொ.சங்கா் பதில்

பயிா்க் கடன் தள்ளுபடியால் 14.43 லட்சம் விவசாயிகள் பயன்

பயிா்க் கடன் தள்ளுபடி கோரி நூதன போராட்டம்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



