ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

பாண்டியாறு - மாயாறு திட்டத்தை செயல்படுத்தக்கோரி கோபியில் செப்டம்பா் 2-இல் ஆா்ப்பாட்டம்! அனைத்து விவசாய சங்கங்கள் அறிவிப்பு

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :

பாண்டியாறு - மாயாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்கள் சாா்பில் கோபியில் செப்டம்பா் 2-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அனைத்து விவசாய சங்க நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கோபியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். விவசாய சங்க நிா்வாகி பெருமாள் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் பி.சி.செங்கோட்டையன் உள்பட அனைத்து விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

விவசாயிகளின் பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். ஈரோடு, திருப்பூா், கரூா் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீா் ஆதாரமாகவும் பாசனத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் பவானிசாகா் அணையின் நீா் பற்றாகுறையை போக்கும் வகையில் பாண்டியாறு - மாயாறு - பவானி ஆறு இணைப்புத் திட்டத்தை அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் கோபியில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் செப்டம்பா் 2-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.