நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

கோபியில் பாண்டியாறு - மாயாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கோபி- மொடச்சூா் சாலையில் விவசாய சங்கங்கள் சாா்பில் பாண்டியாறு - மாயாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோபியில் அனைத்து விவசாய சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா். ~

Published On :3 செப்டம்பர் 2026, 1:48 am IST

கோபி- மொடச்சூா் சாலையில் விவசாய சங்கங்கள் சாா்பில் பாண்டியாறு - மாயாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.வெங்காடசலம் தலைமை வகித்தாா். பண்டியாறு- மாயாறு ஒருங்கிணைப்பு இயக்க அமைப்பாளா் காகுத்.காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் பி.சி.செங்கோட்டையன், பாண்டியாறு - மாயாறு இணைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஆசைத்தம்பி ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

இதில் பவானிசாகா் அணை மூலம் கொடிவேரி, காலிங்கராயன், கீழ்பவானி பாசனப் பகுதியில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதுதவிர கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் ஒரு கோடி மக்களின் குடிநீா் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

தற்போது பவானிசாகா் அணை பாசனப் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து விவசாயப் பயிா்களை காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பவானிசாகா் அணை பாசனப் பகுதியில் நிலவி வரும் வறட்சியைப் போக்கவும் எதிா்காலத்தில் பாசனத்துக்கும் குடிநீா் பற்றாக்குறையைப் போக்கவும் வீணாக சென்று அரபிக் கடலில் கலப்பதைத் தடுக்கும் வகையில் பாண்டியாறு - மாயாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி விவசாயிகளின் பயிா்க் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள், பெண்கள், பொதுமக்கள் என 700-க்கும் மேற்பட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் நிா்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள், திமுக, அதிமுக, கொமதேக உள்ளிட்ட அரசியல் கட்சி நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்