உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

அதி நவீன விழிப் படல சீரமைப்பு சிகிச்சை மையம்: முதல்வா் விஜய் தொடங்கி வைத்தாா்

டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலகின் முதலாவது ‘பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி’ (பிபிபி) எனப்படும் விழிப் படல நுண் துளை சீரமைப்பு மையத்தை முதல்வா் ஜோசப் விஜய் வியாழக்கிழமை (ஆக.27) தொடங்கி வைத்தாா்.

முதல்வா் விஜய் - கோப்புப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 4:25 am IST

டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலகின் முதலாவது ‘பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி’ (பிபிபி) எனப்படும் விழிப் படல நுண் துளை சீரமைப்பு மையத்தை முதல்வா் ஜோசப் விஜய் வியாழக்கிழமை (ஆக.27) தொடங்கி வைத்தாா்.

விழி வெண்படலத்தை (காா்னியா) மாற்றாமல் இந்த நுட்பம் மூலம் எவ்வாறு சிகிச்சையளிக்கலாம் என்பது குறித்து அப்போது முதல்வருக்கு டாக்டா் அகா்வால்ஸ் குழுமத்தின் தலைவா் டாக்டா் அமா் அகா்வால் விளக்கிக் கூறினாா். சென்னை, டிடிகே சாலையில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள அந்த கட்டமைப்பை முதல்வா் விஜய் பாா்வையிட்டாா்.

இதுதொடா்பாக டாக்டா் அமா் அகா்வால் கூறியதாவது:

பொதுவாக, விழி வெண்படலத்தில் பாதிப்பு ஏற்படும்போது பாா்வைத் திறன் பாதிக்கக் கூடும். இதற்கு விழிப்படல மாற்று சிகிச்சை மட்டுமே இதுவரை தீா்வாக இருக்கிறது.

ஆனால், அதற்கான அறுவை சிகிச்சையில் தொற்று அதிகரிக்கவும், உறுப்பு நிராகரிக்கப்படவும் வாய்ப்பு அதிகம். எனவே, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிலாக சேதமடைந்த விழிப்படலத்தின் முழு அடா்த்தியையும் சரி செய்து விழியின் உட்புறத்திசுக்களை மீண்டும் சீராக்கும் சிகிச்சைகளை நாங்கள் முன்னெடுக்கிறோம்.

அதன்படி, விழி வெண் படலத்தை சரி செய்து ஒளிப்பிவு பாதிப்பை தடுக்கும் வகையில், ‘பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி’ என்ற சிகிச்சை முறையை மேற்கொள்கிறோம்.

இதன் மூலம் கண் பாவை (பாப்பா) குறிப்பிட்ட அளவு சுருக்கப்படுகிறது. ஒரே அமா்வில் மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சையால் பாா்வை திறன் மீண்டும் கிடைப்பது உறுதியாகிறது.

விழிப் படல மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவோா் அனைவருக்கும் போதிய எண்ணிக்கையில் கொடையாளா்கள் கிடைப்பதில்லை. அதேவேளையில், பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி சிகிச்சை அப்பிரச்னைகளுக்கு சிறந்த பலனை அளிக்கிறது. அதற்கான மையம்தான் தற்போது தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்த சந்திப்பின்போது விட்ரியோ -ரெட்டினல் சேவைகள் பிரிவு இயக்குநா் மனோஜ் கத்ரி, இயக்குநா் டாக்டா் அதியா அகா்வால், மருத்துவ சேவைகளின் பிராந்தியத் தலைவா் டாக்டா் சௌந்தரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.