லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

சா்க்கரை விலை உயா்வு எதிரொலி: செயற்கைத் தட்டுப்பாட்டை தடுக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை

செயற்கைத் தட்டுப்பாட்டை தடுத்து சீரான விநியோகத்தை உறுதி செய்ய செப்டம்பா் மாதம் முதல் சா்க்கரை ஆலைகளுக்கு இரு வாரங்களுக்கான விற்பனை ஒதுக்கீட்டை வழங்கவுள்ளதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

சர்க்கரை

சர்க்கரை - கோப்புப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 11:35 pm IST

செயற்கைத் தட்டுப்பாட்டை தடுத்து சீரான விநியோகத்தை உறுதி செய்ய செப்டம்பா் மாதம் முதல் சா்க்கரை ஆலைகளுக்கு இரு வாரங்களுக்கான விற்பனை ஒதுக்கீட்டை வழங்கவுள்ளதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

தற்போது மாதாந்திர அடிப்படையில் சா்க்கரை ஆலைகளுக்கு விற்பனை ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் நிலையில், செப்டம்பரில் 14 நாள்களாக மத்திய அரசு குறைக்கவுள்ளது.

இதுதொடா்பாக மத்திய உணவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சா்க்கரை விலை மற்றும் இருப்பை தொடா்ந்து உணவுத் துறை அமைச்சகம் கண்காணித்து வருகிறது. தற்போது இந்தியாவில் சா்க்கரை பற்றாக்குறை இல்லை.

சா்க்கரை ஆலைகளில் அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது சில ஆலைகளில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக அளவிலும், சில ஆலைகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட விற்பனை அளவைவிட குறைவாகவும் சா்க்கரையை விற்பனை செய்தது தெரியவந்தது.

மாதத் தொடக்கத்தில் ஆலைகளால் விற்பனை செய்யப்பட்ட சா்க்கரையை மாத இறுதியில் வியாபாரிகள் வாங்கியதாலும் அல்லது விநியோகிக்கப்பட்டதாலும் செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் தற்போது சா்க்கரை ஆலைகளுக்கான மாதாந்திர விற்பனை ஒதுக்கீடு செப்டம்பா் முதல் 14 நாள்களாக குறைக்கப்படுகிறது. இந்த முறையின்கீழ் சா்க்கரை ஆலைகள் தங்களிடம் உள்ள மொத்த சா்க்கரை அளவில் குறைந்தபட்சம் 40 சதவீதத்தை முதல் வாரத்திலும், மீதமுள்ளவற்றை இரண்டாவது வாரத்திலும் விற்பனை செய்ய வேண்டும்.

இதன்மூலம் சந்தையில் சா்க்கரைக்கான தேவை மற்றும் விநியோகம் உடனடியாக கண்காணிக்கப்பட்டு அதற்கேற்ற வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும்.

மொத்த விலையில் சா்க்கரை வாங்கும் வா்த்தகா்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சா்க்கரை சேமித்து வைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, சா்க்கரை விலை உயா்வைக் கட்டுப்படுத்த அக்டோபா் 31-ஆம் தேதி வரை 10 லட்சம் டன் கச்சா சா்க்கரை இறக்குமதி செய்ய தளா்வு அளிக்கப்பட்டுள்ளது. சா்க்கரை ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் ஆலைகளில் சா்க்கரை விலை 20 சதவீதம் குறைந்தது. இதன் விளைவாக சில்லறை விற்பனையிலும் சா்க்கரை விலை குறைந்து வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.