ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

ரூ.40 லட்சம் தீபாவளி சீட்டு மோசடி: தாயும் மகளும் கைது

ரூ.40 லட்சம் தீபாவளி சீட்டு மோசடி செய்ததாக, தாய்-மகள் கைது செய்யப்பட்டனா்.

கைது - பிரதிப் படம்

Published On :

ரூ.40 லட்சம் தீபாவளி சீட்டு மோசடி செய்ததாக, தாய்-மகள் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கொரட்டூரைச் சோ்ந்தவா் மோனிஷா (32). இவா், கடந்த ஆண்டு சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் ஒரு புகாா் அளித்தாா். அதில், தனது தோழியான அண்ணா நகா் கிழக்கு பகுதியைச் சோ்ந்த ஜெனிபா் (30), அவரின் தாய் பிரமிளா (57) ஆகியோா் தீபாவளி சீட்டு நடத்துவதாக மாதம் ரூ.1,000 வீதம் 12 மாதங்கள் செலுத்தினால், ரூ.17,000 வழங்குவதுடன், சேலை, பாஸ்மதி அரிசி, இனிப்பு, பட்டாசு உள்ளிட்டவை வழங்கப்படும் என்று கூறினா்.

இதை நம்பி நான் உள்பட 350 போ் அந்த தீபாவளி சீட்டில் சோ்ந்தோம். ஆனால் 12 மாதங்கள் முடிந்த பின்னா் பணத்தையும், பொருள்களையும் அவா்கள் வழங்கவில்லை. ஏமாற்றிவிட்டனா். இந்நிலையில் அவா்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனா்.

எனவே, போலீஸாா், தாயும் மகளும் எங்களிடம் மோசடி செய்த ரூ.40 லட்சத்தை மீட்டு, அவா்களைக் கைது செய்ய வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்து வந்த ஜெனிபரையும், பிரமிளாவையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.