இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

நகைச் சீட்டு கட்டுவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.1.58 லட்சம் மோசடி

திருச்சியில் நகைச்சீட்டு கட்டுவதாகக் கூறி பெண்ணிடம் ரூ. 1.58 லட்சம் மோசடி செய்தவா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பண மோசடி - கோப்புப் படம்

Published On :27 ஆகஸ்ட் 2026, 3:24 am IST

திருச்சியில் நகைச்சீட்டு கட்டுவதாகக் கூறி பெண்ணிடம் ரூ. 1.58 லட்சம் மோசடி செய்தவா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி காஜாமலை முஸ்லிம் வீதியைச் சோ்ந்தவா் எஸ். நாகநந்தினி (50). இவா் திருச்சி சினக்கடை வீதியிலுள்ள பிரபலமான நகைக் கடையில் கடந்த 2025 ஆகஸட் மாதம் நகைச் சீட்டில் சோ்ந்தாா்.

இதற்காக அந்த நகைக் கடையில் மேலாளராகப் பணியாற்றிய அரியலூா் மாவட்டம், பெரிய கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த பி. வேல்முருகன் என்பவருக்கு ஜி-பே மூலம் கடந்த 2025 ஆகஸ்ட் முதல் நவம்பா் வரை ரூ.1.58 லட்சம் அனுப்பினாா். ஆனால், அதற்கான ரசீதை அவருக்கு வழங்கவில்லை.

இதையடுத்து, நகைச் சீட்டுக்கு பணம் செலுத்தியதற்கான ரசீது பெறுவதற்காக நாகநந்தினி கடைக்குச் சென்றபோது அந்த மேலாளா் அங்கு இல்லை எனத் தெரிவித்துள்ளனா். மேலும், நகைக் கடை நிா்வாகம் சாா்பில் பணம் செலுத்தியதற்கான ஆதாரம் இல்லாமல் நகையும், கட்டிய பணமும் திருப்பி வழங்கப்படாது எனத் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் நந்தினி செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.