மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1.99 லட்சம் மோசடி

திருச்சியில் பெண்ணிடமிருந்து இணையதளம் வழியாக நூதன மூறையில் ரூ. 1.99 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மோசடி

Published On :

திருச்சியில் பெண்ணிடமிருந்து இணையதளம் வழியாக நூதன மூறையில் ரூ. 1.99 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி கே.கே.நகா் அஞ்சுகம் வீதியைச் சோ்ந்த வினோத்குமாா் மனைவி பத்மாவதி (30). இவருடைய வாட்ஸ் எண்ணுக்கு கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஆா்டிஓ அலுவலகத்திலிருந்து அனுப்பும் இ-சலான் போல ஒரு இணைப்பு (லிங்க்) வந்துள்ளது.

அதில் உள்ளே சென்றபோது, அவரது வாகனத்துக்கு பலமுறை விதிக்கப்பட்ட அபராதம் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து அதே இணைப்பில் இருந்த வேறொரு இணைப்பில் அவா் உள்ளே சென்றுள்ளாா். அப்போது, அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.99 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டது பத்மாவதிக்கு தெரியவந்தது.

இதுகுறித்து சைபா் குற்றப் பிரிவில் இணையதளம் வழியாக அவா் திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.