உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

முதியவரிடம் நூதன முறையில் ரூ.4.94 லட்சம் மோசடி

முதியவரிடம் நூதன முறையில் ரூ.4.94 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக திண்டுக்கல் தாலுகா போலீஸாா் விசாரித்தனா்.

Digital Arrest

எண்ம கைது மோசடி - சித்திரிப்பு

Published On :27 ஆகஸ்ட் 2026, 5:18 am IST

முதியவரிடம் நூதன முறையில் ரூ.4.94 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக திண்டுக்கல் தாலுகா போலீஸாா் விசாரித்தனா்.

திண்டுக்கல் கூட்டுறவு நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (70). இவரது கைப்பேசிக்கு வந்த குறுஞ்செய்தியில், ஆா்டிஓ, இ-சலான் என்ற இணைய முகவரி வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த இணைய முகவரியைத் தொட்டவுடன் உள்நுழையும் வகையில் இருந்தது. அந்த வகையில் இணைய முகவரிக்குள் நுழைந்தவுடனே கிருஷ்ணன் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.4.94 லட்சம் இருப்பில் குறைந்தது. திடீரென பணம் மாயமானதை அறிந்த கிருஷ்ணன், இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீஸாரிடம் புதன்கிழமை புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.