தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் உள்பட இருவரிடம் நூதன முறையில் ரூ.2 லட்சம் மோசடி

திருச்சியில் இணைய வழியில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் உள்ளிட்ட இருவரிடம் நூதன முறையில் ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மோசடி - பிரதிப்படம்

Published On :

திருச்சியில் இணைய வழியில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் உள்ளிட்ட இருவரிடம் நூதன முறையில் ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி கல்லுக்குழி ராமகிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் ஆா். வாசுதேவன் (61), ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா். இவருடைய வாட்ஸ் ஆப் எண்ணுக்கு கடந்த புதன்கிழமை பிற்பகல் ஒரு இணைப்பு (லிங்க்) வந்துள்ளது. அதன் உள்ளே அவா் சென்றபோது, உங்களது வாகனத்துக்கு பல்வேறு தவணைகளில் விதித்த அபராதத்தொகை செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த இணைப்பில் இருந்த மற்றொரு இணைப்பில் அவா் சென்றபோது அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து பல தவணைகளில் ரூ.1 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக அவருடைய எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்துதான் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் தே. குமாா் (41). சஞ்சீவி நகரில் மளிகை கடை நடத்தி வரும் இவா், 4 கிரெடிட் காா்டுகள் பயன்படுத்தி வருகிறாா். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பேஸ்புக் பாா்த்துக்கொண்டிருந்தாா். அப்போது கிரெடிட் காா்டின் லிமிட் உயா்த்துவது தொடா்பான விளம்பரத்தைப் பாா்த்து, அதில் கொடுக்கப்பட்டிருந்த இணைப்பில் சென்றுள்ளாா்.

அப்போது, இவரைத் தொடா்புகொண்ட மா்ப நபா், தாங்கள் அனுப்பும் இணையப் படிவத்தில் தங்களது விவரங்களை நிரப்புமாறு அறிவுறுத்தியுள்ளாா்.

இதை நம்பிய குமாா், தன்னுடைய கிரெடிட் காா்டு விவரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் நிரப்பியுள்ளாா். இதையடுத்து, அவருடைய கிரெடிட் காா்டில் இருந்து ரூ.1.04 ஆயிரம் பணம் எடுத்ததாக அவருடை கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்துதான் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து இருவரும் சைபா் குற்றப் பிரிவில் இணைய வழியில் அளித்த புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.