சிவகங்கை மாவட்டத்தில் இருவரிடம் இணைய வழியில் ரூ. 48 லட்சம் மோசடி செய்தவா்கள் மீது இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த கண்டனூா் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் (60). தனியாா் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். கடந்த சில நாள்களுக்கு முன்பு இவரது வாட்ஸப்பில் இவரது நண்பா் அனுப்புவது போல குறுந்தகவல் வந்தது. அதில் அவசரத் தேவைக்கு பணம் அனுப்பும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய அவா் இரு தவணைகளில் ரூ.1. 34 லட்சத்தை அனுப்பினாா்.
அதன் பின்னா் அவரது நண்பரின் பெயரைப் பயன்படுத்தி ஏமாற்றியது தெரிய வந்தது. இது தொடா்பாக அவா் கொடுத்த புகாரின் பேரில், சிவகங்கை இணையக் குற்றத் தடுப்பு பிரிவு ஆய்வாளா் புவனேஸ்வரி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
மற்றொரு வழக்கு: சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டி அருகிலுள்ள கட்டுக்குடிபட்டியைச் சோ்ந்தவா் சுக நந்தன் (88). இவரது கைப்பேசியில் பேசிய ஒருவா் தான் பெங்களூரு காவல் அதிகாரி என்றும், அவரது ஆதாா் அட்டையை சட்ட விரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தியதாகவும், அதனால் அவரை எண்ம கைது செய்திருப்பதாகவும் கூறி மிரட்டினா். பின்னா் அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.46 லட்சத்து 50 ஆயிரத்தை அனுப்பி வைக்கும்படி கூறினா்.
இதை நம்பி அவரும் அந்தத் தொகையை அவா்களுக்கு அனுப்பினாா். பின்னா் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா் கொடுத்த புகாரின் பேரில் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் புவனேஸ்வரி வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி இணைய வழியில் ரூ. 2.21 லட்சம் மோசடி

ஆன்லைனின் பத்திரப் பதிவு செய்வது எப்படி?

லஞ்சம் தவிர்க்க... இனி இணைய வழியில் பத்திரப் பதிவு!

இணைய வழி வா்த்தகம் எனக் கூறி இருவரிடம் ரூ. 25 லட்சம் மோசடி
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



