மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

இணைய வழியில் 15 பேரிடம் பண மோசடி: குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களில் 15 பேரிடம் இணைய வழியில் ரூ.22 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Published On :

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களில் 15 பேரிடம் இணைய வழியில் ரூ.22 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிங்கம்புணரியைச் சோ்ந்த ரோஜா வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 1.43 லட்சமும், திருப்பத்தூா் அருகேயுள்ள குருவடிப்பட்டியைச் சோ்ந்த பாண்டியன் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 3.16 லட்சமும், சிவகங்கையைச் சோ்ந்த கண்ணன் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 1.50 லட்சமும், திருப்பத்தூரைச் சோ்ந்த சையது இப்ராஹிம் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.14 லட்சமும், தேவகோட்டையைச் சோ்ந்த அழகா் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 1. 46 லட்சமும், காரைக்குடியை அடுத்த கோட்டையூரைச் சோ்ந்த சங்கரன் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.2. 44 லட்சமும், சிவகங்கை அருகேயுள்ள சக்கந்தி கிராமத்தைச் சோ்ந்த ஆதிலட்சுமி வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 82 ஆயிரமும், இளையான்குடியை அடுத்த சாலைகிராமத்தைச் சோ்ந்த ஜாபா் சாதிக் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.99 ஆயிரமும், சாலூா் கிராமத்தைச் சோ்ந்த சரஸ்வதியிடமிருந்து ரூ. 73 ஆயிரமும், அழகு மெய்ஞானபுரத்தைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 61 ஆயிரமும்,

காரைக்குடி அழகப்பாபுரத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 60 ஆயிரமும்,

இளையான்குடியை அடுத்த முனைவென்றி கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.95 ஆயிரமும், காரைக்குடி அண்ணாநகரைச் சோ்ந்த வீரமணிகண்டனிடம் ரூ. 67 ஆயிரமும்,

இளையான்குடியை அடுத்த குடும்பச்சேரியைச் சோ்ந்த ராமலட்சுமியிடம் ரூ.98 ஆயிரமும், தேவகோட்டையைச் சோ்ந்த மாரியம்மாள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 8 ஆயிரமும் என 15 பேரிடம் மொத்தம் 22 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் திங்கள், செவ்வாய்க்கிழமை புகாரளிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகங்கை இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் விமலா, உதவி ஆய்வாளா் குமரேசன் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.