மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

சென்னை ஐஐடியில் புதிய கூடைப்பந்து விளையாட்டுப் போட்டி அறிமுகம்!

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு ‘ஃபைபால்’ எனப்படும் புத்தாக்க கூடைப்பந்து விளையாட்டை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடி - கோப்புப் படம்

Published On :

தேசிய விளையாட்டு தினத்தை (ஆக. 29) முன்னிட்டு ‘ஃபைபால்’ எனப்படும் புத்தாக்க கூடைப்பந்து விளையாட்டை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

இது குறித்த செய்திக்குறிப்பு: வழக்கமான கூடைப்பந்து விளையாட்டுகளில் இரு அணிகள் மட்டுமே ஈடுபடுவது வழக்கம். ஆனால், ஃபைபால் விளையாட்டில் ஒரே நேரத்தில் 3 அணிகள் வட்ட வடிவ மைதானத்தில் களமிறங்குகின்றன. இதில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் ஒரு கூடையைப் பாதுகாத்துக் கொள்ளும். அதேவேளை, எதிரணியின் இரு கூடைகளில் பந்தை செலுத்த முற்பட வேண்டும்.

பிரபல ஹாக்கி வீரா் மேஜா் தியான்சந்த்தின் பிறந்த நாளான தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இந்த விளையாட்டை ஐஐடி இயக்குநா் பேராசிரியா் வி.காமகோடி முன்னிலையில் மாணவா் நலன்சாா் டீன் பேராசிரியா் சத்யநாராயணா என்.கும்மாடி உள்ளிட்டோா் பங்கேற்று அறிமுகம் செய்தனா்.

போட்டியில் வெற்றி பெற துல்லியம், மன விழிப்புணா்வு, கூட்டுமுயற்சி, நல்ல உடல் ஆரோக்கியம் அவசியம். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவை அனைத்தும் அவசியமானவை என்று ஐஐடி இயக்குநா் குறிப்பிட்டாா்.

இந்த விளையாட்டின் ஆரம்பகட்டப் போட்டிகளில் சென்னை ஐஐடி, ஏ.எம்.ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பேட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாநிலக் கல்லூரி, சத்யபாமா பல்கலைக்கழகம், சென்னை விஐடி, தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை பங்கேற்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.