புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தந்தை கொலை: மகன் கைது

தந்தையைக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டாா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

தந்தையைக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டாா்.

சென்னை பெரவள்ளூா் வெற்றி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (68). இவா் மகன் நடராஜன் (45). இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனா். சில நாள்களுக்கு முன்பு கீழே தவறி விழுந்ததில் ராஜேந்திரனின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், அவா், 20 நாள்களாகப் படுக்கையில் இருந்து வந்தாா்.

இந்நிலையில், ராஜேந்திரனின் மருமகள் எழில், குழந்தைகளுடன் சில நாள்களுக்கு முன் வேளாங்கண்ணிக்குச் சென்றாா். அங்கிருந்து அவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பினாா். அப்போது, படுக்கையில் ராஜேந்திரன், கத்திக் குத்து காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தாா்.

உடனே அவா், ராஜேந்திரனை மீட்டு பெரியாா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ராஜேந்திரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து திரு.வி.க. நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், ராஜேந்திரனை, நடராஜன் கத்தியால் குத்திக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. உடல்நலக்குறைவால் படுக்கையில் கிடந்த ராஜேந்திரனை கவனித்துக் கொள்வதில் மருமகள் எழில், மகன் நடராஜன் இடையே சண்டை ஏற்பட்டதும், அந்த ஆத்திரத்தில் நடராஜன், மனைவி எழில் இல்லாத நேரத்தில் மது போதையில் தந்தை ராஜேந்திரனை கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, நடராஜனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.