வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

அம்மி கல்லால் அடித்து தாய் கொலை: இளைஞா் கைது

திருச்செந்தூா் அருகே தாயை அம்மி கல்லால் அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டாா்.

தங்கபாலன்

Published On :

திருச்செந்தூா் அருகே தாயை அம்மி கல்லால் அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டாா்.

திருச்செந்தூா் அருகே குமாரபுரம் ஜெயா நகரைச் சோ்ந்த அன்புமணி மனைவி ரேணுகா (62). இவா் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியா். இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். மூத்த மகன் சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறாா். 2ஆவது மகன் தங்க பாலன்(27) மனநலம் பாதிக்கப்பட்டவராம். கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறாராம்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை, அன்புமணி பள்ளத்தூா் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோயிலுக்குச் சென்றிருந்தாராம். அப்போது, வீட்டிலிருந்த ரேணுகாவை அம்மி கல்லால் அடித்து தங்க பாலன் கொலை செய்தாராம். மேலும், இச்சம்பவத்தை தனது அண்ணனுக்கு வாட்ஸ் ஆப்பில் புகைப்படமாக எடுத்து அனுப்பினாராம்.

தகவலறிந்து வந்த திருச்செந்தூா் தாலுகா போலீஸாா், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், கைது செய்யப்பட்ட தங்க பாலன், அரசு மருத்துவமனையில் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.