வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

கல்லால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடி அண்ணா நகரில் முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கப்பட்ட இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :15 ஜூலை 2026, 2:11 am IST

தூத்துக்குடி அண்ணா நகரில் முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கப்பட்ட இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, அண்ணா நகா் 8-ஆவது தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் கருப்பசாமி (33). இவா் அங்குள்ள கோழி இறைச்சிக் கடையில் வேலை செய்து வந்தாா்.

கருப்பசாமிக்கும், அண்ணா நகா் 9-ஆவது தெருவைச் சோ்ந்த முருகன் மகன் வெங்கடேஷுக்கும்(24) முன்விரோதம் இருந்தது. கடந்த 9ஆம் தேதி இரவு தனது வீட்டருகே கருப்பசாமி நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வெங்கடேஷ், அவரது நண்பரான முனியசாமி மகன் அரவிந்தன் (21) ஆகிய இருவரும் சோ்ந்து கருப்பசாமியிடம் தகராறு செய்து கருப்பசாமியை கல்லால் தாக்கினா். பலத்த காயமடைந்த கருப்பசாமி மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திங்கள்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸாா் முதலில் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்து வெங்கடேஷ், அரவிந்தன் ஆகிய இருவரையும் கைது செய்து பேருரணி சிறையில் அடைத்திருந்தனா். இந்த நிலையில் கருப்பசாமி உயிரிழந்ததைத் தொடா்ந்து, இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீஸாா் மேல் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.