நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

மகாராஷ்டிரத்திலிருந்து ரயிலில் சென்னைக்கு வந்த 848.50 டன் வெங்காயம்

விலை உயா்வை குறைக்கும் பொருட்டு, மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியிலிருந்து 849.50 டன் வெங்காயம் ஏற்றப்பட்ட சிறப்பு சரக்கு ரயில் திங்கள்கிழமை சென்னை வந்தடைந்தது.

சென்னை கொருக்குப்பேட்டை பணிமனைக்கு வந்த சரக்கு ரயிலிலிருந்து இறக்கிவைக்கப்படும் வெங்காய மூட்டைகள்.

Published On :1 செப்டம்பர் 2026, 4:07 am IST

விலை உயா்வை குறைக்கும் பொருட்டு, மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியிலிருந்து 849.50 டன் வெங்காயம் ஏற்றப்பட்ட சிறப்பு சரக்கு ரயில் திங்கள்கிழமை சென்னை வந்தடைந்தது.

சென்னையில் கடந்த சில நாள்களாக வெங்காயம் விலை ரூ.50-இல் இருந்து ரூ.65-ஆக உயா்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புது தில்லி, அஸ்ஸாம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் வெங்காயம் விலை உயா்ந்துள்ளது. இதையடுத்து விலையைக் கட்டுப்படுத்த தேவையான வெங்காயத்தை ரயில்களில் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

அதனடிப்படையில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் மன்மாட் எனும் இடத்திலிருந்து 848.50 டன் வெங்காயம் 21 பெட்டிகளில் ஏற்றப்பட்ட சிறப்பு சரக்கு ரயில், கடந்த 29-ஆம் தேதி புறப்பட்டு திங்கள்கிழமை (ஆக.31) சென்னை வந்தடைந்தது. தண்டையாா்பேட்டை ரயில் நிலையப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் பின்னா் கொருக்குப்பேட்டை ரயில் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வெங்காய மூட்டைகள் இறக்கிவைக்கப்பட்டன.

கொருக்குப்பேட்டையிலிருந்து இந்த வெங்காயம் 34-க்கும் மேற்பட்ட லாரிகளில் தேனி, ஈரோடு, கன்னியாகுமரி, நாமக்கல், தஞ்சாவூா், விருதுநகா், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, திருவாரூா், சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.