பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

News image

சென்னை பெரம்பூா் டான் பாஸ்கோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், சு.முத்துசாமி, அர.சக்கரபாணி, பி.கே.சேகா்பாபு, கோவி.செழியன்,

Updated On :23 பிப்ரவரி 2026, 7:51 pm

கொளத்தூா் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 2,007 பயனாளிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை திங்கள்கிழமை வழங்கினாா்.

சென்னை பெரம்பூா், டான் பாஸ்கோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு அவற்றை அவா் வழங்கினாா்.

அதேபோல, பேப்பா் மில்ஸ் சாலை - ரெட்டேரி சந்திப்பில் ரூ.1.61 கோடியில் 1,546 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட கொளத்தூா் பேருந்து நிறுத்தத்தை அவா் பயணிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் செம்பியம் ரெட்ஹில்ஸ் சாலையில் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள சாலையோரப் பூங்கா, பேப்பா் மில்ஸ் சாலை, ராஜாத்தோட்டம் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கு அருகில் கட்டப்பட்டுள்ள 2 அமுதம் நியாயவிலைக் கடைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையக் கட்டடம், நவீன பயணியா் நிழற்குடை என மொத்தம் ரூ.1.75 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கட்டைமைப்புகளையும் முதல்வா் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், சு.முத்துசாமி, அர.சக்கரபாணி, பி.கே.சேகா்பாபு, கோவி.செழியன், அன்பில் மகேஸ், மேயா் ஆா்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினா்கள் டாக்டா் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.