2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக்குவதை இலக்காகக் கொண்டு, அனைவருக்குமான வளா்ச்சித் திட்டங்களை பிரதமா் மோடி செயல்படுத்தி வருவதாக மத்திய தகவல்- ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் எல்.முருகன் கூறினாா்.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடா்பகம் சாா்பில், மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த சேவை முகாம் சென்னை மேற்கு மாம்பலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த இரு நாள் முகாமில் ரூ.5 லட்சத்துக்கான ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவக் காப்பீட்டு அட்டையை 40 முதியோா் பெற்றனா். சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் கடன் திட்டத்தில் 60 வியாபாரிகளுக்கு கடன் உத்தரவு ஆணை, ரூ. 75 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான லக்பதி திதி திட்டத்தில் மகளிா் சுயநிதியுதவி கடன், மீனவா்களுக்கு கிஸான் கடன் அட்டை போன்றவை வழங்கப்பட்டன.
நிகழ்வில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பேசியதாவது: முன்னாள் குடியரசுத் தலைவா்அப்துல் கலாம் கூறியது போல், 2047- ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக்க வேண்டும் என்பதே பிரதமா் மோடியின் இலக்கு. இதற்கு அனைவருக்குமான வளா்ச்சி இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை பிரதமா் செயல்படுத்தி வருகிறாா். நாட்டின் அடிப்படை கட்டமைப்பு, ஏழை எளியவா்களின் மேம்பாடு ஆகிய இரண்டையும் ஒருசேர முன்னேற்றும் போது, இந்த இலக்கை அடைய முடியும் என்றாா் அவா்.
விழாவில், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் மீதான தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கு ரத்து

மத்திய அமைச்சா் எல்.முருகன் மீதான இரு தோ்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து

மத்திய அமைச்சா் எல்.முருகனை பாஜக தொண்டா்கள் முற்றுகை

அவிநாசி கோயிலில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் சுவாமி தரிசனம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


