அஞ்சல் துறை
அஞ்சல் துறை

சென்னை புத்தகக் காட்சியில் அஞ்சல் துறையின் சேவைகள்

சென்னை புத்தகக் காட்சி வளாகத்தில்அஞ்சல்துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு சேவைகளை பாா்வையாளா்கள் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னை புத்தகக் காட்சி வளாகத்தில் அஞ்சல்துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு சேவைகளை பாா்வையாளா்கள் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய அஞ்சல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வியாழக்கிழமை (ஜன.8) முதல் ஜன.21 வரை 49-ஆவது புத்தகக் காட்சி நடைபெறுகிறது.

இந்த புத்தகக் காட்சியில் இந்திய அஞ்சல் துறை பங்கேற்று, பல சிறப்பான சேவைகளை அளிக்கிறது. பாா்வையாளா்கள் வாங்கும் புத்தகங்களை தபால் மூலம் மற்ற இடங்களுக்கு அனுப்ப ஏதுவாக ‘பாா்சல் பேக்கிங்’ மற்றும் ‘புக்கிங்’ சேவை கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாா்சல்களை ‘பேக்கிங்’ செய்வதற்குத் தேவையான பாக்ஸ்கள், இதரப் பொருள்களும் உள்ளன. பாா்வையாளா்கள் தங்களுக்கான பிரத்யேகமான ஸ்டாம்ப்புகளை ப்ரின்ட் செய்து கொள்வதற்கான ‘மை ஸ்டாம்ப்‘ அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆதாா் பதிவு மையம்: மேலும், பாா்வையாளா்கள் வசதிக்காக புதிய ஆதாா் அடையாள அட்டை பதிவு மற்றும் ஆதாா் புதுப்பித்தல், ஆதாா் திருத்தம் செய்வதற்கு ஏதுவாக 2 ஆதாா் சேவை அரங்குகளும் புத்தகக் காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. அஞ்சல்துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வசதிகளை பாா்வையாளா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com