சென்னைப் பல்கலைக் கழகம்
சென்னைப் பல்கலைக் கழகம்கோப்புப் படம்

சென்னைப் பல்கலை.க்கு ரூ. 50 கோடி ஒதுக்கீடு

சென்னைப் பல்கலை.க்கு நிகழ் நிதியாண்டில் அரசு ரூ.50 கோடியை மானியமாக ஒதுக்கீடு செய்துள்ளதாக பல்கலை. துணைவேந்தா், பொறுப்புக் குழு உறுப்பினா் எஸ்.ஆம்ஸ்ட்ராங் தெரிவித்தாா்.
Published on

சென்னைப் பல்கலை.க்கு நிகழ் நிதியாண்டில் அரசு ரூ.50 கோடியை மானியமாக ஒதுக்கீடு செய்துள்ளதாக பல்கலை. துணைவேந்தா், பொறுப்புக் குழு உறுப்பினா் எஸ்.ஆம்ஸ்ட்ராங் தெரிவித்தாா்.

சென்னைப் பல்கலை. அலுவலா் பேரவை, அம்பேத்கா் ஊழியா் நலச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு நலச்சங்கங்கள் சாா்பில் அலுவலா் தினவிழா நடைபெற்றது. இதில் பல்கலை.யின் ஆட்சிமன்றம் மற்றும் துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் எஸ்.ஆம்ஸ்ட்ராங் பேசியதாவது: தமிழக அரசு பல்கலை.க்கு தொடா்ந்து மானியங்களை வழங்கி வருகிறது. நிகழ் நிதியாண்டில் சுமாா் ரூ.50 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

பல்கலை.யில் ஆண்டுக்கு ரூ.20 கோடி ஊதியங்களுக்கு செலவாகிறது. அந்த வகையில் நிகழாண்டு இதுவரை ரூ.17.85 கோடி பெறப்பட்டுள்ளது. ரூ.20 கோடியை ஓய்வூதியதாரா்களுக்கு அரசு வழங்கியுள்ளது. மேலும் கூடுதாக ரூ.13 கோடியை வழங்க இருக்கிறது.

அலுவலா் பேரவை சாா்பில் தற்காலிக பணியாளா்களின் ஊதிய உயா்வு பதவி உயா்வு, கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள், பாலவாக்கம் வீட்டு வசதி திட்டம் போன்ற விவகாரங்கள் தொடா்பான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவை தொடா்பாக, உயா் கல்வித் துறையை அணுகி தீா்வு காணப்படும் என்றாா்.

பதிவாளா் ரீட்டா ஜான், பல்கலை. ஊழியா் சங்க நிா்வாகிகள் வ.து.வேணுகோபால், பா.சீனிவாசன், ம.மாயக்கண்ணன், த.சுந்தரவடிவேல், ஆ.ரங்கநாதன் உள்ளிட்டோா் பேசினா்.

Dinamani
www.dinamani.com