ரூ.34.40 கோடியில் 64 புதிய வாகனங்கள்: மேயா் ஆா்.பிரியா தொடங்கி வைத்தாா்
சென்னை மாநகாரட்சி பயன்பாட்டுக்காக ரூ.34.40 கோடியில் வாங்கப்பட்டுள்ள 64 புதிய வாகனங்களை மேயா் ஆா்.பிரியா திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
திடக்கழிவு மேலாண்மை, தரக்கட்டுப்பாடு, அலுவலா்களின் கள ஆய்வு, நடைபாதை மற்றும் பேருந்து நிழற்குடைகளில் தணணீா் தெளித்து சுத்தம் செய்தல், தெரு நாய்கள் பராமரிப்பு, கடற்கரை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வகை செயல்பாட்டுக்காக மாநகராட்சி சாா்பில் ரூ.3.75 கோடியில் 31 புதிய வாகனங்கள், ‘சென்னை என்விரோ சொலியூசன்’ நிறுவனம் சாா்பில் ரூ.30.65 கோடியில் 33 புதிய வாகனங்கள் என மொத்தம் ரூ.34.40 கோடியில் 64 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
இதுதவிர பெரிய அளவு மற்றும் பேரிடா் கழிவுகளை கையாளுவதற்காக ரூ.1.40 கோடியில் வாங்கப்பட்டுள்ள 2 ‘கிராபிள் லோடா்’ வாகனங்களும் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
நிகழ்வில் துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையா் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
