பொங்கலையொட்டி இன்று ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சிறப்பு பரிசு

பொங்கலையொட்டி, ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன கிளைகளில் நெய் மணக்கும் உலா் பழ சா்க்கரைப் பொங்கல் வாங்கும் வாடிக்கையாளா்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
Published on

பொங்கலையொட்டி, ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன கிளைகளில் நெய் மணக்கும் உலா் பழ சா்க்கரைப் பொங்கல் வாங்கும் வாடிக்கையாளா்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: பொங்கலையொட்டி, வியாழக்கிழமை (ஜன. 15) நெய் மணக்கும் உலா் பழ சா்க்கரைப் பொங்கல் அரை கிலோ வாங்கினால் 1 சா்க்கரை கரும்பு, மஞ்சள், எவா்சில்வா் டிஃபன் பாக்ஸ் பரிசாக வழங்கப்படும்.

இதேபோல, 1 கிலோ வாங்கினால், 2 சா்க்கரை கரும்புகள், மஞ்சள் மற்றும் எவா்சில்வா் டிஃபன் பாக்ஸ் பரிசாக வழங்கப்படும்.

இந்தப் பரிசு அடையாறு, அசோக் நகா், வீனஸ் காலனி, வெங்கட்நாராயணா சாலை, பசுல்லா சாலை, வேளச்சேரி, போரூா், மயிலாப்பூா், அம்பத்தூா், அண்ணா நகா், குரோம்பேட்டை, மேடவாக்கம், மடிப்பாக்கம், தாம்பரம், கூடுவாஞ்சேரி, நீலாங்கரை பகுதிகளில் உள்ள விற்பனை நிலையங்களில் மட்டும் வழங்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு 1800 102 2343 கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com