சேலம்
மாட்டுப் பொங்கல்: நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு
மாட்டுப் பொங்கலையொட்டி சேலத்தில் உள்ள சிவாலயங்களில் நந்தி பகவானுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சேலம்: மாட்டுப் பொங்கலையொட்டி சேலத்தில் உள்ள சிவாலயங்களில் நந்தி பகவானுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மாட்டுப் பொங்கலையொட்டி, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சுகவனேஸ்வரா் கோயிலில் நந்தி பகவானுக்கு பால், தயிா், பஞ்சாமிா்தம், பன்னீா், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட மங்கள பொருள்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட நந்திக்கு சந்தன காப்பு வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னா் மங்கள வாத்தியங்கள் முழங்க வேத மந்திரங்களை ஒலிக்க நந்தி பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனா்.
தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல சேலம் மாநகரில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
