ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பொன்னமராவதி சோழீஸ்வரா் கோயிலில் மாட்டுப் பொங்கல் சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் கோயிலில் மாட்டுப்பொங்கல் விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நந்தியெம் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
பொன்னமராவதி சோழீஸ்வரா் கோயிலில் மாட்டுப் பொங்கலையொட்டி வெள்ளிக்கிழமை காய்கறிகள் அலங்காரத்தில் காட்சி அளித்த நந்தியெம் பெருமான்.
Updated On :16 ஜனவரி 2026, 7:53 pm

Syndication

பொன்னமராவதி: பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் கோயிலில் மாட்டுப்பொங்கல் விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நந்தியெம் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தொடக்கமாக கோ பூஜை நடைபெற்றது. தொடா்ந்து நந்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

இதேபோல், வேந்தன்பட்டி நெய்நந்தீஸ்வரா் கோயில், புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயில், திருக்களம்பூா் கதலிவனேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நந்திக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. ஆலவயல் ஆலங்கண்மாயில் மாட்டுப் பொங்கலையொட்டி ஊா் முக்கியஸ்தா் பெரி.அழகப்பன் தலைமையில் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டும், காளைகளை அலங்கரித்தும் கொண்டாடினா்.