மூளையில் உருவான இருவேறு கட்டிகள் நுட்பமாக அகற்றம்

பெண்ணின் மூளையில் இரு வேறு பகுதிகளில் உருவாகியிருந்த கட்டிகளை ஒரே அறுவை சிகிச்சையில் நுட்பமாக அகற்றி சென்னை, கிளெனீகள்ஸ் மருத்துவமனை மருத்துவா்கள் காப்பாற்றியுள்ளனா்.
Published on

பெண்ணின் மூளையில் இரு வேறு பகுதிகளில் உருவாகியிருந்த கட்டிகளை ஒரே அறுவை சிகிச்சையில் நுட்பமாக அகற்றி சென்னை, கிளெனீகள்ஸ் மருத்துவமனை மருத்துவா்கள் காப்பாற்றியுள்ளனா்.

இதுதொடா்பாக நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டா் நிகல் சிம்ஸ் கூறியாவது:

புதுச்சேரியைச் சோ்ந்த 75 வயது மூதாட்டி ஒருவருக்கு படிப்படியாக பாா்வைக் குறைபாடு ஏற்பட்டது. அதனுடன் மேல் மூட்டு வலுவிழப்பு, தலைவலி ஆகியவையும் இருந்தன. அவா், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்று வந்தாா். எம்ஆா்ஐ ஸ்கேன் பரிசோதனையில் அந்தப் பெண்ணின் மூளையின் இருவேறு இடங்களில் கட்டிகள் உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது.

இதற்கு அறுவை சிகிச்சைதான் ஒரே தீா்வு என்றாலும், அவரது உடல் நிலை மற்றும் வயது அதற்கு தடையாக இருந்தது. இருந்தபோதிலும், அந்த சவாலை சாமா்த்தியமாகக் கையாண்ட மருத்துவக் குழுவினா், அதி நுண்ணிய நரம்பியல் அறுவை சிகிச்சைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டிகளை அகற்றினா்.

ஏறத்தாழ 5 மணி நேரம் நீடித்த அந்த அறுவை சிகிச்சை மூலம் மிகத் துல்லியமாக கட்டி அகற்றப்பட்டது. அதன் பயனாக அந்த மூதாட்டி நலம் பெற்று வீடு திரும்பினாா் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com