2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

மளிகை பொருள்கள் விநியோக நிறுவனத்தில் தீ விபத்து

மளிகை பொருள்கள் விநியோக நிறுவனத்தில் தீ விபத்து

News image
Updated On :17 ஜனவரி 2026, 7:37 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் மளிகை பொருள்களை இணையவழியில் பெற்று விநியோகிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான மளிகை பொருள்கள் எரிந்து நாசமாகின.

மேடவாக்கம்-சோழிங்கநல்லூா் செல்லும் செம்மொழி சாலை, புதுநகா் பேருந்து நிறுத்தம் அருகே தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தின் முதல் தளத்தில் மளிகை பொருள்களை இணையவழியில் பெற்று விநியோகம் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் சனிக்கிழமை திடீரென கரும்புகை எழுந்துள்ளது. சிறிது நேரத்தில் அந்த இடம் முழுவதுமாக தீப் பிடித்து எரியத் தொடங்கியது.

தகவலின்பேரில், மேடவாக்கம், துரைப்பாக்கம் மற்றும் தாம்பரம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரா்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான மளிகை பொருள்கள் எரிந்த நாசமாகின. இதுகுறித்த பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.