ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நீலகிரி, கொடைக்கானலில் உறைபனிக்கு வாய்ப்பு

நீலகிரி, கொடைக்கானலில் உறைபனிக்கு வாய்ப்பு...

News image
Updated On :17 ஜனவரி 2026, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

நீலகிரி மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை(ஜன.18) இரவு அல்லது திங்கள்கிழமை(ஜன.19) அதிகாலை உறைபனி நிலவ வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடகிழக்கு பருவமழை திங்கள்கிழமை(ஜன.18) நாளை காலை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனிடையே, குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், ஞாயிற்றுக்கிழமை (ஜன.18 ) முதல் ஜன.23 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

உறைபனி எச்சரிக்கை: தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கள்கிழமை(ஜன.19)அதிகாலை வேளைகளில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

மழை அளவு:தமிழகத்தில் சனிக்கிழமை (ஜன.17) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தின் ஊத்து மற்றும் நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தலா 10 மி.மீ மழை பதிவானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.