கோப்புப்படம்
கோப்புப்படம்

மெரீனாவில் இன்று இலக்கிய இசை நிகழ்ச்சி

மெரீனாவில் இன்று இலக்கிய இசை நிகழ்ச்சி
Published on

சென்னை மெரீனா கடற்கரையில் திருக்குறள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களை மையமாகக் கொண்ட இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) நடைபெறுகிறது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

‘திருக்கு வாரம்’ விழாவையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் திருக்கு மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களை மையமாகக் கொண்ட இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.

இசையமைப்பாளா் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த ‘திருக்குறளும், தமிழ் இலக்கியப் பாடல்களும்’ எனும் இசை வடிவிலான மக்கள் ரசிக்கும் இசை நிகழ்ச்சி நடத்தப்படும். முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை மாலை 3 முதல் 6 வரை சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி, 6 முதல் 6.30 வரை நடிகை சுஹாசினியின் ‘என் சென்னை‘ நிகழ்ச்சி நடத்தப்படும். இசை நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு ரசிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com