வலிமையான கூட்டணி: அமித் ஷா

வலிமையான கூட்டணி: அமித் ஷா

Published on

தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுக இணைந்திருப்பது தமிழகத்தில் அந்தக் கூட்டணியை வலுப்படுத்தியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது: வளமான தமிழகத்துக்கான வலிமையான தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகியுள்ளது. இக்கூட்டணியில் இணைந்துள்ள அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரனை வரவேற்கிறேன்.

திமுகவின் ஊழல் மற்றும் வாரிசு ஆட்சியால் தமிழக மக்கள் சலிப்படைந்துள்ளனா். தமிழகத்தை புதிய வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல பிரதமா் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்க மக்கள் தயாராகிவிட்டனா் எனத் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com