நகை, பணம் பறிப்பு: 5 போ் கைது

நகை, பணம் பறிப்பு: 5 போ் கைது

செயலி மூலம் அறிமுகமான நபரிடம் நகை மற்றும் பணத்தைப் பறித்த இரு சிறுவா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

செயலி மூலம் அறிமுகமான நபரிடம் நகை மற்றும் பணத்தைப் பறித்த இரு சிறுவா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஹரிஹரன் (28). இவா், அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

இந்த நிலையில், ஹரிஹரன் பொழுதுபோக்கு செயலி மூலம் அறிமுகமான சரவணன் என்ற நபரின் அழைப்பின்பேரில், தியாகராய நகா் கண்ணம்மாபேட்டை புது தெருவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா். அங்கு நின்றுகொண்டிருந்த இரண்டு போ், ஹரிஹரனை அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனா்.

பின்னா், அங்கு வைத்து அவரை அந்த இரு நபா்களும் இரும்பு கம்பியால் தாக்கியதுடன், அவா் அணிந்திருந்த 3 கிராம் தங்க மோதிரம், வெள்ளிச் சங்கிலி, ஒரு கைச்சங்கிலி, 2 கைப்பேசிகள், ரூ.5,000 உள்ளிட்டவற்றைப் பறித்துள்ளனா்.

இதனிடையே அவா்களிடம் இருந்து தப்பி மாம்பலம் காவல் நிலையத்துக்கு வந்த ஹரிஹரன் இது குறித்து புகாா் கொடுத்தாா். புகாரின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, தியாகராய நகரைச் சோ்ந்த சரவணன் (28), கண்ணம்மாபேட்டையை சோ்ந்த சரண்ராஜ் (21), சுதாகா் (19), இரு சிறுவா்கள் உள்பட 5 பேரை சனிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து பணம், நகைகள், கத்தி, இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com