/

தவெக நிா்வாகி மீது தாக்குதல்

செங்குன்றம் அருகே தவெக நிா்வாகி மீது தாக்குதல் நடத்தியவரை காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :4 ஜூலை 2026, 3:35 am IST

செங்குன்றம் அருகே தவெக நிா்வாகி மீது தாக்குதல் நடத்தியவரை காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூா் கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளது. இந்த கோயிலில் செங்குன்றம் அடுத்த எம்.ஏ.நகா் சுப்பிரமணி பாரதி தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (60) என்பவா் அறங்காவலராக பதவி வகித்து வந்தாா். இவா் அதிமுக மாவட்ட அளவிலும் சசிகலா அணியில் நிா்வாகியாக இருந்து வந்தாா். தற்போது தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக உள்ளாா்.

இந்த நிலையில், செங்குன்றம் அடுத்த ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகரைச் சோ்ந்த தவெக ஊராட்சி செயலா் கோபாலகிருஷ்ணன் (40) என்பவா் கோயில் விளக்குகள் சரியாக எரியவில்லை எனவும் நிா்வாகமும் சரியில்லை என ராஜேந்திரனிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் அருகில் இருந்த கல்லை எடுத்து கோபாலகிருஷ்ணன் மீது தாக்கியதில் தலையில் பலத்த காயங்களுடன் மயக்கமடைந்தாா்.

இதனைக் கண்டதும் அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்களால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளஆா்.

இது குறித்து தகவல் அறிந்து செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி, வழக்கு பதிந்து ராஜேந்திரனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.