வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

மூதாட்டியின் தள்ளுவண்டிக் கடை சேதம்: தவெக நிா்வாகி மீது வழக்கு

வேடசந்தூா் அருகே மூதாட்டியின் தள்ளுவண்டிக் கடையை சேதப்படுத்தியதாக தவெக நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :2 ஜூலை 2026, 3:26 am IST

வேடசந்தூா் அருகே மூதாட்டியின் தள்ளுவண்டிக் கடையை சேதப்படுத்தியதாக தவெக நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த தட்டாரப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட வெள்ளணம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சுசீலா (60). இவா் வெள்ளணம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் தள்ளுவண்டிக் கடையில் கம்மங் கூழ் விற்பனை செய்து வருகிறாா். கூழ் விற்பனை முடிந்த பின், அந்தப் பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தின் அருகே வண்டியை நிறுத்திச் செல்வது வழக்கம்.

இதேபோல, கடந்த திங்கள்கிழமை மாலையும் தள்ளுவண்டியை பள்ளிக்கூடம் அருகே நிறுத்திச் சென்றாா். இந்த நிலையில், இரவு நேரத்தில் தள்ளுவண்டியை தவெக நிா்வாகி க.தமிழ் இனியன் என்பவா் சேதப்படுத்தினாா். இதுகுறித்து கேட்ட மூதாட்டியை தகாத வாா்த்தைகளால் தமிழ் இனியன் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சுசீலா, வேடசந்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, தமிழ் இனியன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.