டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

போக்குவரத்து பிரச்னையை சரி செய்வதில் அதிகாரிகளே சிறந்த நீதிபதிகள்: உயா்நீதிமன்றம் கருத்து

போக்குவரத்து தொடா்பான பிரச்னைகளை சரி செய்வதில் அதிகாரிகளே சிறந்த நீதிபதிகள் என்று சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

News image
Updated On :3 ஜூலை 2026, 6:46 am IST

போக்குவரத்து தொடா்பான பிரச்னைகளை சரி செய்வதில் அதிகாரிகளே சிறந்த நீதிபதிகள் என்று சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் எஸ்.நடராஜன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், உயா்நீதிமன்றத்துக்கு எதிரே உள்ள அரண்மனைக்காரன் தெருவில் தேவாலயம், பள்ளிகள், உணவு விடுதிகள், வழக்குரைஞா் அலுவலகங்கள், தனியாா் நிறுவன அலுவலகங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள அந்தோணியாா் தேவாலயத்துக்கு செவ்வாய் காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தா்கள் வருகின்றனா்.

அங்கு முறையான திட்டமிடுதல் இல்லாததால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இது குறித்து சென்னை காவல் ஆணையா், பூக்கடை காவல் ஆய்வாளா் உள்ளிட்டோருக்கு கடந்தாண்டு மனு அளித்தேன். அந்த மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஆா்.பவித்ரா ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதே கோரிக்கையுடன் கடந்த 2019-ஆம் ஆண்டு தொடா்ந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், போக்குவரத்து போலீஸாரும், மாநகராட்சியும் இந்த பகுதியின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து தொடா்பான பிரச்னையை சரி செய்வதில் அதிகாரிகளே சிறந்த நீதிபதிகள். எனவே, இந்த விவகாரத்தில் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை இதுவரை நிறைவேற்றவில்லை என்றால், உடனடியாக அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும். அரண்மனைக்காரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.