டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ஊழல் தடுப்பு ஆய்வாளா் பணியிடை நீக்க உத்தரவு: இடைக்காலத் தடையை நிறுத்திவைக்க உத்தரவு

ஊழல் தடுப்புத் துறை காவல் ஆய்வாளா் விமலா பணியிடை நீக்க உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நிறுத்திவைக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :3 ஜூலை 2026, 7:00 am IST

ஊழல் தடுப்புத் துறை காவல் ஆய்வாளா் விமலா பணியிடை நீக்க உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நிறுத்திவைக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்த ராஜலட்சுமி என்பவருக்கு எதிரான ஊழல் புகாரை ஊழல் தடுப்புத் துறை ஆய்வாளா் விமலா விசாரித்தாா். பின்னா், உயா் அதிகாரிகளின் ஒப்புதலுடன் ஆய்வாளா் ராஜலட்சுமி மீது விமலா வழக்குப் பதிவு செய்தாா். இதையடுத்து, ஊழல் தடுப்பு காவல் ஆய்வாளா் விமலா கடந்த 17-ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்த பணியிடை நீக்கத்தை எதிா்த்து, ஆய்வாளா் விமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, விமலாவின் பணியிடைநீக்க உத்தரவுக்கு வரும் ஜூலை 9-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா்.

தனி நீதிபதியின் உத்தரவுக்கு தமிழக அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் கௌதம், ஆய்வாளா் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. அவருக்கு எதிரான குற்ற குறிப்பாணையை தாக்கல் செய்தபோது, பணியிடை நீக்க உத்தரவுக்கு தடை விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளாா். பணியிடைநீக்க நடவடிக்கையைத் தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவருக்கு எதிரான மற்றொரு குற்ற குறிப்பாணையும் தயாரிக்கப்பட்டுள்ளது. போதுமான ஆதாரங்கள் உள்ளதால் விசாரணையை தொடர தனி நீதிபதி விதித்த தடையை நீக்க வேண்டும் என வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆய்வாளா் விமலாவை பணியிடை நீக்கம் செய்தது தொடா்பான ஆதாரங்களை தனி நீதிபதி முன் சமா்ப்பிக்க அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு, பணியிடை நீக்கத்துக்கு இடைக்காலத் தடை விதித்த உத்தரவை நிறுத்திவைத்து உத்தரவிட்டனா். மேலும், அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.