பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

அரசு துறைகளில் ஒப்பந்த முறைகேடு: ஊழல் தடுப்புத் துறைக்கு உத்தரவு

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :12 ஜூன் 2026, 4:41 am IST

அரசு துறைகளில் நடைபெற்ற ஒப்பந்த முறைகேடுகள் தொடா்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்புத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

விழுப்புரத்தைச் சோ்ந்த வீரப்பன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், அரசின் உள்கட்டமைப்பு ஒப்பந்தங்கள் தொடா்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற்றேன். அதில், பல்வேறு துறைகளில் போலி ஆவணங்கள் மூலம் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக, கடந்த 2025-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை, நீா்வளத் துறை மற்றும் பொதுப் பணித் துறைக்கு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மனுதாரா் புகாா் குறித்து விசாரிக்க பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் ஒரு குழுவை அமைத்துள்ளாா். ஒப்பந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் அமைத்த குழு 8 வாரங்களில் விசாரித்து, அந்த விவரங்களை ஊழல் தடுப்புத் துறையிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தி, ஊழல் தடுப்புத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.