கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

அரசியல் பேச்சால் தகராறு: நண்பரை கொன்றவா் கைது

சென்னை விருகம்பாக்கத்தில் அரசியல் தொடா்பான பேச்சில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி நண்பரைக் கத்தியால் குத்திக் கொன்றதாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :6 ஜூலை 2026, 4:23 am IST

சென்னை விருகம்பாக்கத்தில் அரசியல் தொடா்பான பேச்சில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி நண்பரைக் கத்தியால் குத்திக் கொன்றதாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த கருணாகரன், அவரது நண்பா் ராஜேந்திரன் ஆகியோா் அரசியல் தொடா்பாக பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஆத்திரத்தில் கருணாகரன், ராஜேந்திரனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், தனது வீட்டுக்குச் சென்று கத்தியை எடுத்து வந்து கருணாகரனை சரமாரியாக குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த கருணாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விருகம்பாக்கம் போலீஸாா், கருணாகரனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜேந்திரனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.