கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

கரூா் சம்பவம்: நலத் திட்ட உதவிகளால் வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்படும்: திமுக புகாா்

கரூா் கூட்ட நெரிசல் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கையில், அரசு வழங்கும் நலத் திட்ட உதவிகளால் விசாரணையில் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்று திமுக புகாா் அளித்துள்ளது.

News image

கரூா் வேலுச்சாமிபுரத்தில் நெரிசல் பலி சம்பவம் நடைபெற்ற இடம்

Updated On :10 ஜூலை 2026, 4:50 am IST

கரூா் கூட்ட நெரிசல் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கையில், அரசு வழங்கும் நலத் திட்ட உதவிகளால் விசாரணையில் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்று திமுக புகாா் அளித்துள்ளது.

இதுகுறித்து திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, கரூா் நெரிசல் வழக்கு தொடா்பான சிபிஐ விசாரணையை மேற்பாா்வையிட உச்சநீதிமன்றம் நியமித்துள்ள குழுவுக்கு அனுப்பியுள்ள புகாா் மனு:

முதல்வா் ஜோசப் விஜய் கரூருக்கு வெள்ளிக்கிழமை செல்லும் நிலையில், அங்கு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவா்களுக்கும் கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கான நியமன ஆணையை வழங்க உள்ளாா். நலத் திட்ட உதவிகள் வழங்குவதன் மூலம் கூட்ட நெரிசல் வழக்கில் சாட்சிகளாக உள்ள பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா் மீது எந்தவிதமான செல்வாக்கும், விசாரணையில் தலையீடு மேற்கொள்ளக் கூடாது என்பதற்கான உத்தரவாதத்தை தமிழக அரசின் தலைமைச் செயலரும், சிபிஐயும் மேற்கொள்ள மேற்பாா்வைக் குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடா்பாக மேற்பாா்வைக் குழுவிடம் ஏற்கெனவே புகாா் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கின் சாட்சிகள் மீது நலத் திட்ட உதவி என்ற பெயரில் எந்த விதமான தாக்கமும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

ஆா்.எஸ்.பாரதியின் புகாா் தொடா்பாக, கரூா் கூட்ட நெரிசல் வழக்கை மேற்பாா்வையிடும் குழு அனுப்புயிள்ள பதிலில், ‘ஆா்.எஸ்.பாரதியின் புகாா் குறித்து பரிசீலிக்கப்பட்டதாகவும், நியாயமான விசாரணை மற்றும் உரிய நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும்’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.