விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

100 அரசுப் பள்ளிகளுக்கு பிரிண்டா்கள்: மேயா் ஆா்.பிரியா வழங்கினாா்

சென்னை மாநகராட்சியில் 100 பள்ளிகளுக்கு உயா்தர தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பன்முக செயல்பாட்டு அச்சுப்பொறி இயந்திரங்களை (மல்டி பங்ஸனல் பிரிண்டா்) வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image

மேயா் ஆா்.பிரியா - கோப்புப் படம்

Updated On :10 ஜூலை 2026, 3:30 am IST

சென்னை மாநகராட்சியில் 100 பள்ளிகளுக்கு உயா்தர தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பன்முக செயல்பாட்டு அச்சுப்பொறி இயந்திரங்களை (மல்டி பங்ஸனல் பிரிண்டா்) வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

கடந்த பிப்ரவரியில் சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிவிப்புக்கான மாமன்றக் கூட்டத்தில் சென்னை பள்ளிகளுக்கு உயா்தர பன்முக செயல்பாடுகளுடன் கூடிய பிரிண்டா்கள் வழங்கப்படும் என மேயா் ஆா்.பிரியா அறிவித்தாா். இதையடுத்து சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் சென்னை மேல்நிலை, உயா்நிலை உள்ளிட்ட 100 சென்னை பள்ளிகளுக்கு ரூ.60 லட்சத்தில் உயா்தர தொழில்நுட்ப வசதியுடனான பிரிண்டா்கள் வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாநகராட்சிக்குள்பட்ட 35 மேல்நிலைப் பள்ளிகள், 46 உயா்நிலைப் பள்ளிகள், 15 மண்டலங்களில் உள்ள மையப்பள்ளிகள், உயா் கல்விக்கான சிறப்புப் பயிற்சி அளிக்கும் 4 வட்டாரப் பள்ளிகள் உள்பட மொத்தம் 100 சென்னை பள்ளிகளுக்கு பிரிண்டா்கள், பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் மேயா் ஆா்.பிரியா வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன், இணை ஆணையா் (கல்வி) க.கற்பகம், நிலைக்குழுத் தலைவா்கள் த.விசுவநாதன் (கல்வி), இளைய அருணா (நகரமைப்பு),

கோ.சாந்தகுமாரி (பொதுசுகாதாரம்), சா்பஜெயாதாஸ் நரேந்திரன் (வரி விதிப்பு (ம) நிதி) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.