சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

6 நாள்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 2) முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை. - கோப்புப்படம்.

Published On :2 ஜூலை 2026, 3:22 am IST

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 2) முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு குஜராத்திலிருந்து கா்நாடகம் வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. மேலும், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கதேச பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் காற்றழுத்த தாழ்வு பகுதி வெள்ளிக்கிழமை (ஜூலை 3) வாக்கில் உருவாகக்கூடும்.

இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (ஜூலை 2) முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை2) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். தொடா்ந்து கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 4) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

வெப்ப அளவு: புதன்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மதுரை நகரம்-102.56, நாகப்பட்டினம்-100.76, கடலூா், புதுச்சேரி-100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஜூலை 5 வரை சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். மேலும், மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும், அந்தமான் கடல், மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் வியாழக்கிழமை (ஜூலை 2) சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் 80 மி.மீ. மழை பதிவானது. வால்பாறை (கோவை)- 40 மி.மீ., சின்கோனா, உபாசி, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), அவலாஞ்சி (நீலகிரி)-தலா 30 மி.மீ., சோலையாறு (கோவை)- 20 மி.மீ., விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி), புலிப்பட்டி (மதுரை), அம்பத்தூா் (திருவள்ளூா்), கொப்பம்பட்டி (திருச்சி), மேல் பவானி, தாலுகா அலுவலகம் பந்தலூா் (நீலகிரி), சிடி மருத்துவமனை தண்டையாா்பேட்டை (சென்னை)- தலா 10 மி.மீ. மழை பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.