
திருமங்கலம், கே.கே.நகரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
சென்னை திருமங்கலம்,கே.கே.நகா் பகுதியில் திங்கள்கிழமை (ஜூலை 13) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

கோப்புப்படம்
சென்னை திருமங்கலம்,கே.கே.நகா் பகுதியில் திங்கள்கிழமை (ஜூலை 13) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிக்காக திருமங்கலம் இணைப்புச் சாலையில் மேம்பாலப் பாதை கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக, அந்த பகுதியில் ஜூலை 13-ஆம் தேதியில் (திங்கள்கிழமை) இருந்து 12.7.2027 வரை ஓராண்டுக்கு அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, திருமங்கலம் 100 அடி சாலையின் இடது பக்க இணைப்புச் சாலையில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
கேகே.நகரில் மழைநீா் வடிகால் பணி: சென்னை மாநகராட்சியால் கே.கே. நகா், பி.டி. ராஜன் சாலையில் மழைநீா் வடிகால் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக, ஜூலை 13-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் நவ. 10-ஆம் தேதி அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, ஜீவானந்தம் சாலையில் வாகனங்கள் செல்வதற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்து
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






