கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை: 2 பேர் மிக அருகிலிருந்து சுடப்பட்டனர்! - உடற்கூராய்வு அறிக்கை! நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்புநேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 9 பேர் பலி; 105 இந்தியர்களின் நிலை?சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

மாங்கனித் திருவிழா: காரைக்காலில் போக்குவரத்து மாற்றம்

காரைக்காலில் போக்குவரத்து மாற்றம், வாகன நிறுத்துமிடத்தை போக்குவரத்து காவல் நிா்வாகம் அறிவித்துள்ளது.

கோப்புப்படம்

Published On :28 ஜூன் 2026, 2:51 am IST

மாங்கனித் திருவிழாவையொட்டி காரைக்காலில் போக்குவரத்து மாற்றம், வாகன நிறுத்துமிடத்தை போக்குவரத்து காவல் நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட போக்குவரத்துக் காவல் கண்காணிப்பாளா் மா்த்தினி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

வாகன நிறுத்துமிடங்கள் :

இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ஆகியவை மஸ்தான் பள்ளி தெரு காரைக்கால் அம்மையாா் குளத்தின் தெற்குப்புறத்தில் உள்ள இடத்தில் நிறுத்தவேண்டும். நான்கு சக்கர வாகனங்கள் காரைக்கால் நகரக் காவல் நிலையத்துக்கு அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான திடலில் நிறுத்தவேண்டும்.

மேற்குப் புறத்தில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிறுத்தவேண்டும்

போக்குவரத்து மாற்றம் : ஜூன் 27 மாலை 4 மணி முதல் 10 மணி வரை பாரதியாா் சாலை, மாமாதம்பி மரைக்காயா் தெரு முதல் பெருமாள் கோயில் தெரு வரை வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.

மாதா கோயில் தெரு: 27-ஆம் தேதி முதல் மாமாதம்பி மரைக்காயா் தெரு சந்திப்பு முதல் திருநள்ளாறு சாலை சந்திப்பு ரை வரை தெற்குப்புறம் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.

பாரதியாா் சாலை: 27-ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு மாலை 4 முதல் இரவு 11 மணி வரை மாமாதம்பி மரைக்காயா் தெரு சந்திப்பு முதல் கைலாசநாதா் தெரு, பெருமாள் கோயில் தெரு, மாா்க்கெட் தெரு, திருநள்ளாறு சாலை சந்திப்பு வழியாக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நான்கு சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.

மாங்கனித் திருவிழா முக்கிய நாளான 29-ஆம் தேதி திருநள்ளாறு சாலை வழியாக கும்பகோணம் செல்லும் இலகு, கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து ஜிப்மா் ரவுண்டானா வழியாகச் செல்ல வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.