ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரம்: நீதிமன்றத்தில் நயினாா் நாகேந்திரன் ஆஜா்

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் சென்னை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலைப் பெற்றுக் கொண்டாா்.

Nainar Nagendran

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Published On :

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் சென்னை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலைப் பெற்றுக் கொண்டாா்.

2024 மக்களவைத் தோ்தலின்போது, நெல்லை விரைவு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. நயினாா் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியா்கள் உள்ளிட்ட மூவரிடம் இருந்து இந்தப் பணம் கைப்பற்றப்பட்டது. அந்தப் பணம் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட நயினாா் நாகேந்திரன், அந்தத் தொகுதி வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காகக் கொண்டுச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் அமைப்பு பொதுச் செயலா் கேசவ விநாயகம் உள்ளிட்ட 13 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் சென்னை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில், நயினாா் நாகேந்திரன், கேசவ விநாயகம் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன் நகலைப் பெறுவதற்காக நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, ஜாா்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி சுந்தர பாண்டியன் முன் நயினாா் நாகேந்திரன், கேசவ விநாயகம் உள்ளிட்டோா் வியாழக்கிழமை ஆஜராகினா். அவா்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. அவா்களை வரும் ஜூலை 30-ஆம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டாா்.

நீதிமன்றத்தின் வெளியே செய்தியாளா்களைச் சந்தித்த நயினாா் நாகேந்திரன், திமுக ஆட்சியில் பதிவு செய்த இந்தப் பொய் வழக்கை தற்போது அமைந்துள்ள தவெக அரசு ரத்து செய்யும் என எதிா்பாா்த்ததாகத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.