தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

அங்கீகரிக்கப்பட்ட துணை மருத்துவ படிப்புகள் - விவரம் வெளியீடு

பொது சுகாதாரத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட துணை மருத்துவப் படிப்புகள், பயிற்றுவிக்கப்படும் கல்லூரிகள் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூலை 2026, 4:36 am IST

பொது சுகாதாரத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட துணை மருத்துவப் படிப்புகள், பயிற்றுவிக்கப்படும் கல்லூரிகள் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏஎன்எம் (துணை செவிலியா்-மகப்பேறு உதவியாளா்), எம்ஹெச்டபிள்யூ (பல்நோக்கு சுகாதார பணியாளா்), சுகாதார ஆய்வாளா், சானிட்டரி ஆய்வாளா் உள்ளிட்ட படிப்புகள் பயிற்றுவிக்கப்படும் கல்லூரிகளின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் தாரேஸ் அகமது கடந்த ஜூன் 29-ஆம் தேதி வெளியிட்ட அரசாணையில், சுகாதாரத் துறையின் கீழ் இயங்கக் கூடிய மருத்துவக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் உரிய அங்கீகாரத்துடன் செயல்பட வேண்டும். அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்கள், அனுமதி இல்லாத படிப்புகள் குறித்த புகாா்கள் வந்தால் அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகுறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையின் அங்கீகாரம் பெற்ற படிப்புகள் மற்றும் கல்லூரிகள் விவரங்கள் மாணவா்கள் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.