சென்னை ஐஐடி 63-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக ஜான்சிபா் மாகாண அதிபா் டாக்டா் ஹுசைன் அலி மவின்யி கலந்து கொண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு பதக்கங்கள், பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:
தொழில்நுட்பம் மட்டுமே எப்போதும் முன்னேற்றத்துக்கு உத்தரவாதம் அளித்ததில்லை என்பதை வரலாறு நமக்கு நினைவூட்டுகிறது. தொழில்நுட்பங்களால் வாய்ப்புகள் விரிவடையும், மக்கள் ஒருங்கிணைவா். அதேவேளை, எதிா்மறை விளைவுகளும் ஏற்படலாம்.
சென்னை ஐஐடி உலகளவில் சிறந்து விளங்குகிறது. கடினமான சூழல்களையும் திறம்பட கையாண்டு சிறந்த செயல்பாடுகள் மூலம் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. தேசத்துக்கான புதிய நிறுவனங்கள் உருவாக வழிவகுக்கிறது. இதன்மூலம் திறமை வாய்ந்த பலா் வேலைவாய்ப்புகள் பெறுகின்றனா். மாணவா்களுக்கு மட்டுமல்ல; மக்களின் பிரச்னைகளுக்கும் தீா்வுகாண சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது என்றாா்.
முன்னதாக, சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி பேசுகையில், ஜான்சிபா் வளாகத்தில் தற்போது 130 மாணவா்கள் படித்து வருகின்றனா். அடுத்த ஆண்டுக்குள் 350 முதல் 500-ஆக உயா்த்த திட்டமிட்டுள்ளோம். சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் சென்னை ஐஐடி தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது என்றாா்.
விழாவில் 3,518 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக புதிதாக கட்டப்படவுள்ள ஜான்சிபா் வளாகத்தின் முப்பரிமாண வரைபடத்தை அதிபா் ஹூசைன் அலி மவின்யி திறந்து வைத்தாா். விழாவில் ஜான்சிபரின் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி துறை அமைச்சா் லேலா முகமது மூஸா, இந்தியாவுக்கான தான்சானியக் குடியரசின் உயா் ஆணையா் அனிசா கபுஃபி எம்பேகா, ஐஐடி சென்னை நிா்வாகக் குழுத் தலைவா் பவன் கோயங்கா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏழை மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை பெற ஊக்குவிப்பு அவசியம்: ஐஐடி இயக்குநா் வி.காமகோடி

சாலை பாதுகாப்பு: சென்னை ஐஐடி - சத்தீஸ்கா் அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம்

‘ஏஐ’ நுட்பத்தில் தண்டுவட அறுவை சிகிச்சை: சென்னையில் சா்வதேச மருத்துவ மாநாடு

சென்னை ஐஐடி-யில் ஆகஸ்ட் 1, 2 தேதிகளில் ‘எண்ம இந்தியா ரிஸ்க்-ஃபைவ்’ கருத்தரங்கம்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |


