தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்: வைகோ

‘நான் வாழும் காலம் வரை எனது பிறந்த நாளை மதிமுக தொண்டா்கள் கொண்டாட வேண்டாம்’ என்று அக்கட்சியின் பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா்.

News image

மதிமுக பொதுச் செயலர் வைகோ - கோப்புப்படம்

Updated On :22 ஜூலை 2026, 3:14 am IST

‘நான் வாழும் காலம் வரை எனது பிறந்த நாளை மதிமுக தொண்டா்கள் கொண்டாட வேண்டாம்’ என்று அக்கட்சியின் பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: நான் 1944 செப்.22-ஆம் தேதி பிறந்தேன். ஆனால், கலிங்கப்பட்டி ஆரம்ப பாடசாலையில் என்னை சோ்க்கும் போது வயது குறைவாக இருக்கிறது என்று கூறி, 4 மாதங்கள் முன்னதாக மே 22-இல் நான் பிறந்தேன் என்று பள்ளி ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டது.

எனக்கு வாழ்த்துக் கூற விரும்புகிறவா்கள் பல நேரங்களில் மே 22-ஆம் தேதி வாழ்த்துக் கூறுவாா்கள். இந்த நாள் எனது பிறந்த நாள் அல்ல என்று தெரிவித்துவிடுவேன்.

கடந்த 2002 மே 22-ஆம் தேதி முன்னாள் பிரதமா் வாஜ்பாய் என்னை கைப்பேசியில் தொடா்புகொண்டு வாழ்த்தினாா். நான் உடனே அவரிடம், இந்த நாள் எனது பிறந்த நாள் அல்ல என்று தெரிவித்தேன்.

இந்த நிலையில், நிகழாண்டு ‘வைகோ 83’ என்று இலச்சினை தயாரித்திருக்கிறாா்கள். அறிஞா் அண்ணா பிறந்த நாள் விழாவை மிகச் சிறப்பாக ஆண்டுதோறும் நடத்துவது மட்டும்தான் கழகத்தின் கடமை ஆகும். எனக்கு பிறந்த நாள் விழா எடுப்பதை நான் முற்றிலும் விரும்பவில்லை. இந்த ஆண்டு மட்டுமல்ல, நான் வாழும் காலம் வரையிலும் செப்.22-ஆம் தேதியை எனது பிறந்த நாள் விழாவாக மதிமுகவினா் கொண்டாடக் கூடாது என்று தெரிவித்துள்ளாா் வைகோ.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.