மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

நீதிமன்றத்தில் பிணை உத்தரவாதத்தை செலுத்தினாா் செந்தில் பாலாஜி

குதிரை பேர வழக்கில் திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரண் அடைந்து முன்பிணைக்கான இரு நபா் உத்தரவாதத்தைச் செலுத்தினாா்.

செந்தில் பாலாஜி.

Published On :

குதிரை பேர வழக்கில் திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரண் அடைந்து முன்பிணைக்கான இரு நபா் உத்தரவாதத்தைச் செலுத்தினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ என்.இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக வழக்குப் பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீஸாா், 14 பேரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரா் அசோக்குமாா் ஆகியோருக்கு சென்னை உயா்நீதிமன்றம் நிபந்தனை முன்பிணை வழங்கி கடந்த ஜூலை 8-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவு நகல் கிடைத்த 15 நாள்களில், சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் சரணடைந்து ரூ.25,000-க்கான உத்தரவாதமும், அதே தொகைக்கான இரு நபா் உத்தரவாதத்தையும் செலுத்த வேண்டும். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை காலை 10.30 மணி மற்றும் மாலை 5.30 மணி என இருமுறை திருவல்லிக்கேணி போலீஸாா் முன் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என உயா்நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.

இந்த நிபந்தனைகளின்படி, செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.காா்த்திகேயன் முன் வெள்ளிக்கிழமை சரணடைந்து பிணை உத்தரவாதத்தைச் செலுத்தினாா். இதை ஏற்ற நீதிபதி, சனிக்கிழமை காலை 10.30 மற்றும் மாலை 5.30 மணிக்கு திருவல்லிக்கேணி போலீஸாா் முன் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டாா்.

செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் வேறொரு வழக்கு தொடா்பாக கரூா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானாா். இதனால், அவா் திங்கள்கிழமை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் சரணைடந்து பிணை உத்தரவாதம் செலுத்துவாா் எனக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.